பர்லியாரில் சோதனை செய்வதில் சிரமம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

Added : மே 22, 2020
Share
Advertisement
 பர்லியாரில் சோதனை செய்வதில் சிரமம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்

குன்னுார்:குன்னுார் பர்லியார் சோதனை சாவடியில், போதிய போலீசார், ஊழியர்கள் இல்லாததால் பணியில், சிரமம் ஏற்படுகிறது.நீலகிரி மாவட்டத்தின், முக்கிய நுழைவாயிலான, பர்லியார் சோதனைச்சாவடி வழியாக வரும், இ---பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள், சோதனை செய்து, அனுமதிக்கப்படுகிறது.
இதில், போலீசார், வருவாய்துறையினர், சுகாதார துறையினர், பேரூராட்சியினர், 14 பேர் உட்பட தன்னார்வலர்கள் பணியில் உள்ளனர்.தற்போது, 400 முதல் 500 வரை மற்ற வாகனங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளும் சென்று வருகின்றன.அதில், பலரும் இ--பாஸ் அனுமதி பெறாமல், லாரிகளில் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களை கண்டறிவதில் பல்வேறு சிரமம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது தப்பித்து, உள்ளே வருகின்றனர்.
'ரெட் அலர்ட்' பகுதியில் இருந்து வருபவர்களை, சுகாதார துறையினர், கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். மேலும், அதிகாலை, 5:00 மணி முதல், 7:00 மணிக்குள், இ--பாஸ் இல்லாமல் வருபவர்கள், எந்த சோதனையும் இல்லாமல் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, கூடுதலாக போலீசார் மற்றும் ஊழியர்களை நியமித்து, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X