பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உர பயன்பாடு: காலத்தின் கட்டாயம்

Added : மே 22, 2020
Share
Advertisement
 இயற்கை உர பயன்பாடு: காலத்தின் கட்டாயம்

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, பயிர் சாகுபடி செய்ய, விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி செய்யபடுகிறது. கோத்தகிரி பகுதியில், நெடுகுளா, சுள்ளிகூடு மற்றும் கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில், கூடுதல் பரப்பளவில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு, கொரோனா நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு நேரத்தில், ஒரு மாதத் திற்கு மேலாக, விவசாயிகள் நிலத்தை உழுது சமன் செய்து, பண்படுத்துவதில் சிக்கல் இருந்தது. தற்போது, ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமலில் இருந்தாலும், 'பயிர் அறுவடை உட்பட, விவசாய பணிகளை மேற்கொள்ளலாம்,' என, அரசு தெரிவித்துள்ளது. இதனால், பசுந்தேயிலை பறிப்பது உள்ளிட்ட தோட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், காய்கறி பயிரிடுவதற்கு தேவையான உரம், தனியார் கடைகளில் விவசாயிகள் பெற்றுவந்த நிலையில், பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்பட்டாலும், உங்களுக்கு கூடுதலாக செலவழிக்கவேண்டிய நிலை உள்ளது.இதனை தவிர்க்க, கிராமப்புற விவசாயிகள், மாட்டு சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். ரசயான உரங்களை காட்டிலும், இயற்கை உரங்களின் விலை குறைவு என்பதாலும், கூடுதலாக மகசூல் கிடைப்பதால், விவசாயிகள் இயற்கை உரங்கள் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X