பொது செய்தி

தமிழ்நாடு

இ-பாஸ் இல்லாமல் நுழைந்தால் நடவடிக்கை நிச்சயம்

Added : மே 22, 2020
Share
Advertisement

கோத்தகிரி:'கோத்தகிரி குஞ்சப்பனை சோதனைச்சாவடியில், இ-பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்க கூடாது,' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா நோய் தொற்று காரணமாக, நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில், அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வருபவர்கள், குறிப்பிட்ட பகுதிகளில், இ-பாஸ் பெற்றிருந்தாலும், நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடமும் கண்டிப்பாக பாஸ் பெற வேண்டும் என்ற உத்தரவு உள்ளது.'இந்த அறிவிப்பை மீறி, இ--பாஸ் பெறாமல், அரசியல் ஆதரவுடன் சிலர் வந்துள்ளனர்,' என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கோத்தகிரி குஞ்சப்பனை சோதனைச்சாவடியில், நேரடி ஆய்வு செய்து, 'இ-பாஸ் பெறாமல் வருபவர்களை அனுமதிக்க கூடாது; பாஸ் பெற்றிருந்தாலும், இங்கு வருபவர்களை கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும்; இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்துக்குள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து குஞ்சப்பனை மற்றும் பனகுடி ஆதிவாசி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். இதில், தாசில்தார் மோகனா, ஆர்.ஐ., பூவேந்திரன் மற்றும் பி.டி.ஓ., நந்தகுமார் ஆகியோர், உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X