பொது செய்தி

தமிழ்நாடு

ரிப்பன் மாளிகைக்கும் பரவியது கொரோனா

Added : மே 22, 2020
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சி தலைமையிடமான, ரிப்பன் மாளிகை வளாக, 'அம்மா' மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மாநகராட்சியின் தலைமை அலுவலக ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அம்மா மாளிகையில்

சென்னை : சென்னை மாநகராட்சி தலைமையிடமான, ரிப்பன் மாளிகை வளாக, 'அம்மா' மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், மாநகராட்சியின் தலைமை அலுவலக ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது, அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அம்மா மாளிகையில் உள்ள கண்காணிப்பு அறை, பொதுத் துறை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும், ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், அம்மா மாளிகையில் பணியாற்றும், 500க்கும் மேற்பட்டோருக்கு, தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பலர், தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இதனால், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, பல சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X