எள் பயிரை தாக்கும் பச்சைப்பூ நோய்

Added : மே 22, 2020
Share
Advertisement

திருப்புல்லாணி:-திருப்புல்லாணி வட்டாரத்தில் 200 ஹெக்டேரில் நெற்பயிருக்கு அடுத்ததாக எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆலங்குளம், களரி, லாந்தை, திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, பனையடியேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் எள் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது வளர்ச்சி பருவம், அறுவடை பருவத்தில் ஆங்காங்கே பச்சைப் பூ நோய் காணப் படுகிறது. இது ஒரு பைடோ பிளாஸ்மா வைரஸ் நோயாகும். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் அமர்லால் கூறியதாவது:

அதிக வெப்பத்தால் ஹார்மோன் மாற்றம் காரணமாக இந்நோய் ஏற்படலாம்.எள் செடியின் அனைத்து பூக்கும் பகுதிகளும் பச்சை இலைகளாக மாறுகின்றன. பூக்கும் பாகங்களில் நரம்புகளில் பச்சை நிறம் வெளிர்ந்து காணப்படும். காய்கள் வளர்ந்தாலும் அதில் விதைகள் காணப்படாது.

எவ்வாறு பரவுகிறது:

தத்து பூச்சிகளால் பச்சை பூ வைரஸ் நோய் பரவுகிறது. பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டும். நோயுற்ற எள் செடிகளை வெட்டி எரித்து அப்புறப்படுத்த வேண்டும். ஊடு பயிராக எள், - துவரை 6:1 என்ற விகிதத்தில் பயிரிட வேண்டும். பருத்தி, பயறு, நிலக்கடலை வயலுக்கு அருகே எள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். வேப்பங்கொட்டை சாறு, டைமீத்தோயேட் பூச்சிக்கொல்லிமருந்தை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X