பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை அவையம்

Added : மே 22, 2020
Share
Advertisement
தேசிய மாற்றுத்திறனாளிகள் நலம் விரும்பும் அமைப்பான சக் ஷம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை அவையம் இலவசமாக வழங்கப்படுகிறது. செயற்கை அவையம் கேட்டு விண்ணப்பித்திருந்த, காங்கயம் - பழைய கோட்டை, நொச்சிப்பாளையம், பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த, மூன்று பேருக்கு, நேற்று செயற்கை அவையம் வழங்கப்பட்டது. சக் ஷம் தலைவர் ரத்தினசாமி, மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர்

தேசிய மாற்றுத்திறனாளிகள் நலம் விரும்பும் அமைப்பான சக் ஷம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை அவையம் இலவசமாக வழங்கப்படுகிறது. செயற்கை அவையம் கேட்டு விண்ணப்பித்திருந்த, காங்கயம் - பழைய கோட்டை, நொச்சிப்பாளையம், பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த, மூன்று பேருக்கு, நேற்று செயற்கை அவையம் வழங்கப்பட்டது. சக் ஷம் தலைவர் ரத்தினசாமி, மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்..சர்வோதய சங்கங்களில் பணியாற்றுபவர் நலனுக்காக, தமிழ்நாடு மாநில கதர் மற்றும் பாலிவஸ்திரா நுாற்போர், நெய்வோர் நலநிதி மற்றும் ஓய்வூதிய அறக்கட்டளையிலிருந்து முதல் கட்டமாக, 8,850 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய், வீதம் 88 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வினியோகிக்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, 7,061 நபர்களுக்கு தலா ஆயிரம் வீதம், 70.61 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக, அறக்கட்டளை தலைவர் செந்தில்நாதன் தெரிவித்தார்.ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் கடந்த, 4ம் தேதி முதல், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு உத்தரவிட்டது. 11ம் தேதி முதல் இணையதள சேவை துவங்கப்பட்டது. லைசன்ஸ், புதுப்பிப்பு, புதிய வாகன பதிவுக்கு தலா, பத்து விண்ணப்பம் வீதம், 30 விண்ணப்பம் மட்டுமே ஒரு நாளைக்கு அனுமதிக்கப்பட்டது. கடந்த பத்து நாட்களில் திருப்பூரின் இரு அலுவலகங்கள் சேர்த்து, நுாறு லைசன்ஸ் கூட வழங்கப்படவில்லை.வெள்ளகோவிலில், ஞாயிறுதோறும், வாரச்சந்தை 80 ஆண்டுகளாக செயல்படுகிறது.
கொரோனா ஊரடங்கால், இரண்டு மாதமாக சந்தை மூடப்பட்டது. இதனால், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறுகின்றனர். எனவே, நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார், சுகாதாரத்துறையினர் இணைந்து வாரச்சந்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை கண்டித்து, அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன், அனைத்து தொழிற் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அனைத்து தொழிற் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், சின்னேரிபாளையம் ஊராட்சி பழைய ஏ.டி., காலனி முதல் சாலையூர் வழியாக, வளையபாளையம் வரை, 35.26 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதற்கான பூமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் பிரசாத்குமார் முன்னிலையில், நடந்தது. சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், துணை தலைவர் சம்பத்குமார் பங்கேற்றனர்.
அன்னுாரில் இருந்து அவிநாசி நோக்கி நேற்று முன்தினம் மாலை கார் (டி.என்.39, சி.இசட் 0039) சென்று கொண்டிருந்தது. சுப்ரமணி, 70 என்பவர் காரை ஒட்டினார். கட்டுப்பாடின்றி சென்ற கார் எதிரே வந்த, டூவீலர் மீது மோதி, நிலை தடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்தது. விபத்தில், டூவீலரில் பயணம் செய்த கருவலுார், தெற்கு ரத வீதியை சேர்ந்த ஜீவானந்தம், 29, என்பவர் இறந்தார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
பல்லடம் நகராட்சியின் பல இடங்களில், கொரோனா விழிப்புணர்வு அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் அதை அலட்சியப்படுத்தி வருகின்றனர். தங்களது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி, கடை உரிமையாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றுமாறு அறிவுறுத்த வேண்டியது அவசியம். விதிமீறும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் செரங்காட்டை சேர்ந்தவர் சிவநாராயணன், 34; கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டார். இவர் மதுபோதையில் அவ்வப்போது தொட்டியை கழுவது உள்ளிட்ட ஏதாவது ஒரு வேலையை செய்து வருவார். அதனால், போதையில் தண்ணீர் தொட்டியை கழுவ சென்று, தவறி உள்ளே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது தள்ளி விட்டார்களா என்பது குறித்து ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக அரசு, நல வாரிய உறுப்பினர்களுக்கு, நிவாரண உதவியாக, 2 ஆயிரம் ரூபாய் அறிவித்தது. அவ்வகையில், கைத்தறி நெசவாளர்களுக்கு, ஓரிரு நாட்களில், நிவாரணம் சென்றடைந்தது. உடனடியாக கிடைத்த உதவி தொகையால், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிலர் கூறுகையில், 'நல வாரியத்தில் இல்லாத உறுப்பினர்களுக்கும், நிவாரண தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தக்க சமயத்தில் கிடைத்த உதவி,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X