பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் மணல் முன்பதிவு நேற்று முதல் மீண்டும் துவக்கம்

Added : மே 22, 2020
Share
Advertisement

சென்னை : ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், 'ஆன்லைன்' மணல் விற்பனைக்கான முன்பதிவை, பொதுப்பணித்துறை மீண்டும் துவங்கியுள்ளது.

பொதுப்பணித்துறை வாயிலாக, ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு, மணல் விற்பனையை, அரசு செய்கிறது. இதற்காக, tnsand என்ற, இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தடை நீக்கம்மேலும், மணலுக்கு மாற்றாக, எம் - சாண்ட் பயன்படுத்தி, கட்டுமான பணிகளை மேற்கொள்ள, அரசு பரிந்துரை செய்து வருகிறது.இருப்பினும், சில கட்டுமான பணிகளுக்கு, ஆற்று மணல் அத்தியாவசியமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக, மணல் குவாரிகள் இயக்கப்படவில்லை. தற்போது, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், குவாரிகள், மணல் லாரிகள் இயங்குவதற்கான தடை நீங்கி விட்டது.

இதையடுத்து, ஆன்லைன் வாயிலாக மணல் விற்பனை செய்வதற்கான முன்பதிவை, பொதுப்பணித்துறை நேற்று முதல், மீண்டும் துவங்கியது.இனி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை, 4:00 மணிக்கு, முன்பதிவு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'தவிர்க்க முடியாத காரணங்களால், அரசு மணல் குவாரிகள் செயல்பட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தந்த வாரத்திற்கான அளவு மட்டும், ஆன்லைன் பதிவில் வழங்கப்படும். முதலில் பதிவு செய்தவர் களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.

'மணல் விற்பனை தொடர்பான வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்' எனவும், மணல் விற்பனைக்கான அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனுமதிமுன்பதிவு துவங்கியுள்ள நிலையில், வரும், 26 முதல், படிப்படியாக, 10 குவாரிகள் திறக்கப்பட்டு, மணல் வினியோகம் செய்யப்படவுள்ளது. இதற்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X