சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் ஊரணியில் பலி

Added : மே 23, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:பரமக்குடி அருகே சோமநாதபுரம் சிவாஜி காலனியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் சபரிகிரிநாதன் 25.

இவர், ராமநாதபுரம் இந்திய உணவு கழகத்தில் காவலாளியாக பணிபுரிந்தார். இவர் நேற்று காலை பட்டணம்காத்தான் சுடுகாட்டு ஊரணியில் குளிப்பதற்காக மேலாளர் செல்லப்பனுடன் சென்றார். இருவரும் குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்ற சபரிகிரிநாதன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

செல்லப்பன் தகவலின் பேரில் ராமநாதபுரம் தீயணைப்பு வீரர்கள் சபரிகிரிநாதனின் உடலை மீட்டனர். சபரிகிரிநாதனுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந் நிலையில் அவர் பலியானதால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X