பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம், சானிடைசர் விற்பனை: 3 மாதத்தில், 50 சதவீதம் அதிகரிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:மருந்து கடைகளில், முக கவசம் மற்றும் சானிடைசர் விற்பனை கடந்த மூன்று மாதத்தில், 50 சதவீத அளவில் அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருந்து கடைகளில் முக கவசங்கள் மற்றும் சானிடைசர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக, இப்பொருட்கள், மருந்து கடைகளில், ஒன்று முதல், 5 சதவீத அளவில் மட்டுமே விற்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களில், 50 சதவீத அளவில் விற்பனை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் அசோகன் கூறியதாவது:'நேஷனல் பார்மசூட்டிக்கல் பிரைசிங் அத்தாரிட்டி' வாயிலாக சானிடைசர் மற்றும் முக கவசத்துக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவிலான மக்கள் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மருந்து கடைகளுக்கு சென்று, என்-95 அல்லது சர்ஜிக்கல் முகக்கவசம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களிலும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், மருந்து கடைகளில் வழக்கத்துக்கு மாறாக, 50 சதவீத அளவில், இப்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X