சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்: 'இ-சேவை' மையங்களில் அலைமோதல்

Added : மே 23, 2020
Share
Advertisement
 சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்: 'இ-சேவை' மையங்களில் அலைமோதல்

திருப்பூர்:நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இ-சேவை' மையங்கள் திறக்கப்பட்டதால், சமூக இடைவெளியை மறந்து, மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது.வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும், 21 வகையான சான்றிதழ்கள், பொது இ-சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், மார்ச் 25ம் தேதி முதல் சேவை மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 'ஆன்லைன்' மூலமாக மட்டும் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது. சேவை மையம் இயங்காமல், மக்கள் எவ்வித சான்றிதழுக்கும் விண்ணப்பிக்க இயலவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின், தற்போதுதான் பொது சேவை மையங்கள், 'இ-பாஸ்' விண்ணப்பிக்க வசதியாக திறக்கப்பட்டது; இருப்பினும், அனைத்து சான்றிதழ் பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.'இ-சேவை' மையத்தை பார்த்தால், கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பது போல் தெரியவே இல்லை. பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்க, மக்கள் காலை முதல் கூட்டம் சேர்ந்து விடுகின்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.இதுகுறித்து, கொரோனா தடுப்பு குழுவினர் கூறியதாவது:'இ-சேவை' மையங்களில், மக்கள் கூட்டம் சேர்வதை தடுக்க வேண்டும். சேவை மையத்தை பயன்படுத்த வரும் மக்களுக்கு, நுழைவாயிலுக்கு முன்பாகவே, 'டோக்கன்' வழங்கிவிட வேண்டும். டோக்கன் பெற்றாலும், கவுன்டர் முன்பாக, இரண்டு பேர் மட்டும் நிற்க அனுமதிக்க வேண்டும்.மற்றவர்கள், வளாகத்தில், சமூக இடைவெளியுடன் காத்திருந்து,வரிசையில் செல்ல வழிவகை செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்ய, சானிடைசர் வழங்க வேண்டும். சில நாட்களுக்கு, போலீசாரை நியமித்து, மக்களை வரிசைப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X