அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சி தொடர மக்கள் விருப்பம் ; ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., தகவல்

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அ.தி.மு.க., ஆட்சி தொடர மக்கள் விருப்பம் ; ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., தகவல்

சென்னை : 'தமிழக மக்கள், அ.தி.மு.க., அரசே தொடர விரும்புகின்றனர்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க., அரசு நான்காம் ஆண்டை நிறைவு செய்து, இன்று ஐந்தாம் ஆண்டை துவக்குகிறது. இதையொட்டி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒன்றரை கோடி, அ.தி.மு.க., உறுப்பினர்கள் ஒத்துழைப்பாலும், தமிழக மக்களின் பேராதரவாலும், அ.தி.மு.க.,வையும், அரசையும், ஜெ.,வின் நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம். அதன் காரணமாக, மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தர வரிசையில், தமிழகம் முதலிடம். தமிழகத்தின் நீர் நிலைகளை பாதுகாக்க, குடிமராமத்து பணிகள், சிறப்பாக நடந்து வருகின்றன.உலக முதலீட்டாளர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய துாண்டும், பல்வேறு நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

உலகையே அச்சுறுத்தும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க, தேவையான மருத்துவ பணிகளில், அரசு முழு மூச்சாக பணியாற்றி வருகிறது.இவை, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற, அர்ப்பணிப்பு உணர்வுக்கு எடுத்துக்காட்டுகள். பட்டியலிட அரசின் சாதனைகள், அணிவகுத்து நிற்கின்றன. நாம் செய்திட்ட பணிகள் ஏராளம். இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருந்தாலும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் உண்டு.ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அரசு, தமிழக உரிமைகளை காப்பதிலும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஜெ., வழியில் திறம்பட செயலாற்றும்.

ஜெ., குறிப்பிட்டதை போல, அ.தி.மு.க., என்னும் ஆலமரம், ஆயிரங்காலத்து பயிராக செழித்து வளரும். தமிழக மக்கள், அ.தி.மு.க., அரசை, தங்களின் நலன் காக்கும் அரசாக போற்றுகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் நடக்கும் அரசே, தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
23-மே-202007:23:12 IST Report Abuse
natarajan s அப்படியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X