பொது செய்தி

தமிழ்நாடு

மணலுாரில் அகழாய்வு பணி தொடக்கம்

Added : மே 23, 2020
Share
Advertisement
 மணலுாரில் அகழாய்வு பணி தொடக்கம்

திருப்புவனம்:கீழடி 6ம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக மணலுாரில் இன்று முதல் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கீழடியில் நடந்த 5 கட்ட அகழாய்வில் உறைகிணறு, தந்த தாயகட்டை, தங்க அணிகலன்கள், சுடுமண் குழாய்கள் உள்ளிட்ட இரண்டு ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. பிப்ரவரி 19ல் தொடங்கப்பட்ட 6ம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மணலுார் தவிர்த்து மற்ற இடங்களில் மார்ச் 24 வரை நடந்தது. ஊரடங்கு காரணமாக அகழாய்வு பணிகள்நிறுத்தப்பட்டு மே20ல் மீண்டும் தொடங்கப்பட்டது. மணலுாரில் யோகலட்சுமி என்பவரது இரண்டு ஏக்கர் நிலத்தில் இன்று (மே 23) முதல் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

நேற்று தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் இடம் சுத்தம் செய்யப்பட்டு அகழாய்வு செய்யப்பட உள்ள இடங்களில் அடையாளம் இடப்பட்டன.ஓய்வு பெற்ற தமிழ் துறை பேராசிரியர் முத்துச் சாமி கூறுகையில், மணலுார் பாரம்பரியமிக்க நகரம்.கீழடி,கொந்தகை,மணலுார்,அகரம் இணைந்தது தான் மதுரை நகரம், க்ஷ
அகழாய்வு நடைபெறும் கீழடியே மணலுார் கண்மாய் கரையை ஒட்டிதான் அமைந்துள்ளது. மணலூரில் அகழாய்வு பணிகள் நடைபெறும் பட்சத்தில் கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X