பொது செய்தி

தமிழ்நாடு

'கேங்மேன்' தேர்வு முடிவு வெளியீடு

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : மின் வாரியம், 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமனம் செய்வதற்காக நடத்திய, எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட கள பணிகளை மேற்கொள்ள, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமிக்க உள்ளது. விண்ணப்பதாரர்கள், உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என, அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச கல்வி தகுதியாக, ஐந்தாம் வகுப்பு என, நிர்ணயிக்கப்பட்டது. இருப்பினும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் உட்பட, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு, 2019 இறுதியில், உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.அதில், தேர்வானவர்களுக்கு, மார்ச், 15ல், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதை, 15 ஆயிரம் பேர் எழுதினர்.

அந்த முடிவுகளை, மின் வாரியம், நேற்று தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், பதிவெண்ணை பதிவு செய்து, மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கேங்மேன் பதவிக்கான எழுத்து தேர்வில், தேர்வர்கள் எடுத்துள்ள மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டாலும், அதில், அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில், வேலைக்கு தேர்வானவர்களின் விபரம், சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், பின்னர் வெளியிடப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X