'சிறந்த நிர்வாகம்' குறித்து வகுப்புகள் பா.ஜ.,வின் துணை அமைப்பு ஏற்பாடு

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுடில்லி : பா.ஜ.,வுடன் தொடர்புடைய, மக்கள் திட்ட ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு, 'சிறந்த நிர்வாகம்' என்ற தலைப்பில், இம்மாத இறுதியில், 'ஆன்லைன்' வாயிலாக, வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது.

மத்தியில், இரண்டாவது முறையாக, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து, வரும், 30ம் தேதியுடன், ஓராண்டு நிறைவு பெறுகிறது.இதை முன்னிட்டு, அன்றைய தினம், சிறந்த நிர்வாகம் என்ற தலைப்பில், ஆன்லைன் வகுப்புகள் நடத்த, பா.ஜ.,வுடன் தொடர்புடைய மக்கள் திட்ட ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, பா.ஜ., - -எம்.பி.,யும், மக்கள் திட்ட ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான வினய் சஹஸ்ரபூதே, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சிறந்த நிர்வாகம் தருவது எப்படி என்ற அறிவை வளர்ப்பது தான், ஆன்லைன் வகுப்புகளின் நோக்கம்.

எனவே, கட்சி பாகுபாடின்றி, யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். கொரோனா நிலவரம் குறித்து, தினமும் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்து வரும், மத்திய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், நிடி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்ட பலர், இந்த வகுப்புகளில் உரை நிகழ்த்த உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X