அம்பான் செய்திக்கான பாக்ஸ்

Added : மே 23, 2020
Share
Advertisement

வங்கதேசத்தில் பலி 22 : அண்டை நாடான வங்கதேசத்தில், கடந்த, 20ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, அம்பான் புயல், கரையை கடந்தது. 180 முதல், 200 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசி, நாட்டையே புரட்டிப் போட்டது. 26 மாவட்டங்களில், 1,100 கி.மீ., துாரத்திற்கு சாலைகள் சேதமடைந்து உள்ளன; 200க்கும் மேற்பட்ட பாலங்களும், 233 அரசு கட்டடங்களும் சிதைந்துள்ளன. நாடு முழுதும் உள்ள, 3.60 கோடி மின் இணைப்புகளில், இரண்டு கோடி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்கள் சாய்ந்ததிலும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும், 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஜேஷார் மாவட்டத்தில் மட்டும், அதிகபட்சமாக, 12 பேர் பலியாகி உள்ளனர். வீடுகள், விவசாய நிலங்கள், மின் இணைப்புகள், தகவல் தொழில்நுட்ப கோபுரங்கள், நீர் ஆதாரங்கள், மீன் வளம் மற்றும் கால்நடை துறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சேதங்கள், 1,100 கோடி ரூபாய் வரை இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X