பரமக்குடி:கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளர்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு, ரூ.1000 வீதம் இரண்டு தவணைகளாக நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பதிவு செய்யாத கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகளில் 200 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவோர் அடிப்படையில் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன்படி கணவன் - மனைவி மற்றும் அவர்களின் மகன், மகள் உள்ளிட்டோர் வெவ்வேறு சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பதுடன், ஒரே சங்கத்தில் இருந்து கூட்டாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு குடும்ப தலைவர் பெயரில் மட்டுமே மின் இணைப்புஇருக்கும். இத்துடன் பெரும்பாலான நெசவாளர்கள் வாடகை வீட்டில் இருக்கின்றனர்.
எனவே சங்க உறுப்பினர் புத்தகம், ஆதார் எண், வாக்காளர் அட்டை அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும், என பரமக்குடி - எமனேஸ்வரம் அனைத்த கைத்தறிநெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பெடரேசன் கோரிக்கை விடுத்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE