சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்சியில் கடத்தல் கும்பல்

Added : மே 23, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:கடத்தல் கும்பல், ரவுடி, திருட்டு மது விற்பனை கொடி கட்டி பறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி., வருண்குமார் சமூக விரோதிகளுக்கு செக் வைத்துள்ளார்.

ஊர், தெருவில் நடக்கும் சமூக விரோத செயல்களை அச்சமின்றி கூற 94899 19722 என்ற அலைபேசி எண்ணை எஸ்.பி., அறிமுகப்படுத்தியது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ஆக்ஷனில் இறங்கிய எஸ்.பி., கடந்த 5 மாதத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், ம

உச்சிப்புளி, கமுதி, துாவலில் துப்பாக்கியுடன் ரவுடிகள், திருட்டு மது விற்ற ஏஜென்டுகள் பலர் கைதாகினர். மே 21ல் ரூ.5 கோடி போதை பொருளுடன் 9 பேரை கைது செய்து, கடத்தலை தடுக்க வேண்டிய சுங்கத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு போலீசார், உளவுத்துறைக்கு எஸ்.பி., தலைமையிலான போலீசார் ஷாக் கொடுத்தனர். எஸ்.பி.,யின் அதிரடியால் மிரளும் பல கடத்தல்காரர்கள், வேறு மாவட்டத்திற்கு தாவ முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X