செயற்கை மீன் வளர்ப்பு திட்டத்தில் வருமானம் அதிகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை மீன் வளர்ப்பு திட்டத்தில் வருமானம் அதிகம்

Added : மே 23, 2020
Share

ராமேஸ்வரம் அருகே செயற்கை மீன் வளர்ப்பு திட்டத்தில் மீனவர்களுக்கு மாற்று தொழில் மூலம் வருவாய் கிடைத்தது. இலங்கை கடற்படை தாக்குதலில் பாதித்த மீனவர்களுக்கு மாற்று தொழிலாக மீன் வளர்ப்பு திட்டத்தை ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் மீன்துறையினர் செயல்படுத்தினர்.

இத்திட்டத்தில் ரூ.1 கோடியில் தொட்டியில் சுவாச கருவியுடன் கோபியா மீன், கொடுவாய் மீன், பாரை மீன்களை வளர்க்கின்றனர். மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 15 கிராம் எடையில் வாங்கிய இம்மீன்களை 60 முதல் 70 நாட்கள் வளர்த்து மீனவர் சங்கத்தினர் பாம்பன், மண்டபம் கடலில் வைத்துள்ள கூண்டு வலையில் 12 முதல் 24 மாதம் வரை வளர்க்கின்றனர்.

இதில் கோபியா மீன் 25 கிலோ, கொடுவாய், பாரை மீன்கள் 3 கிலோ வரை வளர்கிறது. ருசியான இம்மீனுக்கு கோவை, கேரளா, கர்நாடகாவில் மவுசு அதிகம் என்பதால், மாற்று தொழிலான மீன் வளர்ப்பில் நல்ல வருவாய் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X