பொது செய்தி

தமிழ்நாடு

'கோ-30' சோளம் விதை பண்ணையில் ஆய்வு

Added : மே 23, 2020
Share
Advertisement
 'கோ-30' சோளம் விதை பண்ணையில் ஆய்வு

திருப்பூர்:செட்டிபாளையத்தில் அமைந்துள்ள, 'கோ-30' ரக சோளம் விதை பண்ணையில், வேளாண் அதிகாரிகள் நேற்று, கள ஆய்வு மேற்கொண்டனர்.திருப்பூர் ஒன்றியம், செட்டிபாளையத்தில், 'கோ-30' சோளம் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. தானிய பயிர் வகையில், 'கோ-30' ரக சோளம், மற்ற ரகங்களை விட, ஐந்து முதல், 10 சதவீதம் கூடுதல் மகசூல் கொடுக்கும்; இதன் வயது, 100 முதல், 105 நாட்கள். தானிய மகசூல் பெறவும், மாட்டு தீவன உற்பத்திக்கும் இது கை கொடுக்கிறது.மானாவாரியில், 2.47 ஏக்கரில், 2,800 கிலோ தானியம் கிடைக்கும். இறவையில், 3,660 கிலோ தானியமும்; 9,290 கிலோ தீவனமும் கிடைக்கும். மாவட்ட விவசாயிகள், இந்த ரக சோளத்தை தேர்வு செய்து, பயன்படுத்தலாம் என, வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.வேளாண்துறை, இந்த ரக சோளத்தை பயிரிட்டு, தீவனம் மற்றும் தானிய மகசூலில் தன்னிறைவை பெறலாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்ட விதைச்சான்று துறை வழிகாட்டுதலுடன், விவசாயிகள், 'கோ-30' ரக விதை சோளப்பண்ணை அமைத்தனர்.அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், மாவட்ட விதைச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து, தொழில்நுட்ப அலுவலர் வசந்தாமணி, விதைச்சான்று அலுவலர் கணசேன், உதவி விதை அலுவலர் ராஜா உள்ளிட்டோர், ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X