பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் அதிகரித்த பிளாஸ்டிக் பயன்பாடு

Added : மே 23, 2020
Share
Advertisement
 ஊரடங்கால் அதிகரித்த  பிளாஸ்டிக் பயன்பாடு

பல்லடம்:ஊரடங்குக்கு இடையே, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு, பல்லடத்தில் அதிகரித்துள்ளது.கொரோனா ஊரடங்கால், பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்த்து வந்தனர். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பி வருகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பினை கருத்தில்கொண்டு, தமிழக அரசு, பாலிதீன் பைகள் உட்பட, பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. ஊரடங்கு நாட்களில், நோய் தடுப்பு நடவடிக்கைகளிலேயே கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வந்தால், பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.குறிப்பாக, மெழுகு பூச்சு டம்ளர்கள், மற்றும் பாலிதீன் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பேக்கரி, ஓட்டல் ஆகியவற்றில், பாலிதீன் பைகளில், உணவு பார்சல் செய்து தருகின்றனர்.அதிகாரிகளும் இது குறித்து கண்டுகொள்ளாததால், தடையின்றி அவை பயன்பாட்டில் உள்ளன. எனவே, இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், அரசு உத்தரவை பின்பற்றி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X