கடனுதவி பெற முடியாமல் மகளிர் குழு கவலை

Added : மே 23, 2020
Share
Advertisement

திருப்பூர்:தமிழக முதல்வர் அறிவித்தபடி, சிறப்பு கடனுதவிக்கு விண்ணப்பிக்க, உரிய படிவம் கிடைக்காமல், மகளிர் குழுவினர் கவலை அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 12 ஆயிரத்துக்கும் அதிகமான மகளிர் குழு செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு நிவாரணமாக, சிறப்பு கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.அவ்வகையில், மகளிர் குழு உறுப்பினருக்கு, தலா, 5,000 ரூபாயும், குழுவுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் கடன் வழங்கப்படும் நிலையில், அவிநாசி வட்டாரத்தில், விண்ணப்ப படிவம் கூட கிடைக்கவில்லை என, பெண்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கோமகன் கூறியதாவது:மாவட்டத்தில், 425 குழுக்களுக்கு, விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது; அவற்றில், 94 குழுக்களுக்கு, 84 லட்சம் ரூபாய் கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 331 குழுக்களுக்கு பரிசீலனை நடந்து வருகிறது. இத்துடன், 2,384 குழுக்களுக்கு, 15 கோடி ரூபாய் அளவுக்கு கடனுவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் கிடைக்காத குழுக்களுக்கு, மகளிர் திட்டம் மூலம் படிவம் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X