அரசியல் நாடகத்தை நிறுத்துங்க

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அரசியல் நாடகத்தை நிறுத்துங்க

எதற்கெடுத்தாலும், மத்திய அரசை குறை சொல்வதை, மேற்கு வங்க முதல்வர் மம்தாவும், காங்., பொதுச் செயலர் பிரியங்காவும் வழக்கமாக கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் காலத்திலாவது, தாங்கள் நடத்தி வரும் அரசியல் நாடகத்தை, இவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

- சிவராஜ் சிங் சவுகான் , மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,

உ.பி., முதல்வர் மீது வழக்கு

காங்கிரஸ் சார்பில், பஸ்கள் இயக்க அனுமதி கொடுத்த, உ.பி., முதல்வர், பின், தகுதி சான்றிதழ் இல்லை என கூறி, பஸ்களை இயக்க தடை விதித்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் பஸ்களுக்கு, ஜூன், 30 வரை, எந்த ஆவணமும் கேட்கக் கூடாது என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறிய, உ.பி., முதல்வர் மீது, வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

- சச்சின் பைலட் , ராஜஸ்தான் துணை முதல்வர், காங்.,

பிரதமர் வழியில் முடிவு

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின், நாட்டின் பொருளாதாரம் வலுப்பட வேண்டும். தொழில் மற்றும் மக்கள் நலனை காக்கும் வகையில் நடக்க வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்தார். அந்த வழியைப் பின்பற்றி, ரிசர்வ் வங்கி, வட்டி சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. மேலும், கடன் தவணையை செலுத்த, மூன்று மாத அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இது, தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும், வழிவகுக்கும்.

- ஜே.பி.நட்டா , தேசிய தலைவர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-மே-202011:11:09 IST Report Abuse
madhavan rajan சச்சின் பிளாட் கூறுவதை பார்த்தால் பிரேக் இல்லாவிட்டால் கூட பேருந்து சென்றால் அதைக் கேட்கக்கூடாது என்று கூறுவார் போல இருக்கிறதே. வண்டி பதிவு புதுப்பித்தல் என்பது எல்லா பாதுகாப்பு உபகாரணங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்க்கத்தான். அதை கேட்கக்கூடாது என்றால் காங்கிரஸ் புலன் பெயர்ந்த மக்களுக்கு மரணத்தை விளைவிக்கவா உதவுவதுபோல நடிக்கிறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X