13 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவ பட்ஜெட் அறிவித்தது சீனா

Added : மே 23, 2020
Share
Advertisement

பீஜிங் : அண்டை நாடான சீனா, தன் ராணுவ பட்ஜெட்டுக்கு, 13 லட்சத்து, 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இது, இந்திய ராணுவ பட்ஜெட்டை விட, மூன்று மடங்கு அதிகமாகும்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ராணுவத்துக்கு அதிக நிதி செலவு செய்யும் நாடாக, சீனா உள்ளது. கடந்த 2019ல், 13 லட்சத்து, 35 ஆயிரம் கோடி ரூபாயை, சீனா, ராணுவ பட்ஜெட்டுக்கு ஒதுக்கியது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல்இதில், 13 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய், ராணுவ பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக, ராணுவத்துக்கான பட்ஜெட் அதிகம் உயர்த்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.இந்தியா, 2020ல் ராணுவ பட்ஜெட்டுக்கு, 4 லட்சத்து, 71 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் ஒதுக்கியது.

இது, சீனாவை விட, 2.7 மடங்கு குறைவு. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2019ல், சீனா, 17 லட்சத்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவத்துக்கு செலவு செய்ததாக கூறப்பட்டது.ராணுவத்தை விரிவுபடுத்துவதிலும், அதிநவீன போர் கருவிகளிலும் சீனா அதிக தொகையினை செலவிடுவதாகவும், அதை, சர்வதேச நாடுகளிடம் இருந்து மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, சீன அரசின் செய்தி தொடர்பாளர், ஸாங் யெசூய், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:ராணுவ செலவினங்களில், சீனா வெளிப்படை தன்மையுடனேயே செயல்படுகிறது. இதில், எந்த ஒளிவு மறைவும் கிடையாது.

எங்கள் ராணுவ செலவினங்கள் குறித்த அறிக்கையை, 2007 முதல், ஐ.நா.,விடம், ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறோம்.ராணுவத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது. அவை, எதற்கெல்லாம் செலவிடப்பட்டன என்ற அனைத்து விபரங்களும், அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.அமெரிக்கா, கடந்த ஆண்டு, ராணுவ பட்ஜெட்டுக்கு, 55 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, சீனா வின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைபடுத்தும் மசோதா, சீன பார்லிமென்டில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

குற்றம் : கடந்த சில நாட்களாக, ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரவும், ஹாங்காங்கை, முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், இந்த மசோதா கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கு, ஹாங்காங் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசிய பாதுகாப்பு மசோதா, ஹாங்காங்கின், 'ஒரு நாடு, இரு கொள்கை' என்ற நடைமுறைக்கு எதிரானது என, அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X