ஊரடங்கை வாபஸ் பெற கோரிய வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை வாபஸ் பெற கோரிய வழக்கு தள்ளுபடி

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share

சென்னை : ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெறக்கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த, வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 22ல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, தற்போது வரும், 31 வரை தொடர்கிறது. ஊரடங்கு காலத்தில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு அவசியமற்றது; இதனால், பொருளாதார, பண்பாட்டு, சமூக, மருத்துவ ரீதியாக, மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சாதாரண வைரஸ்வைரஸ் பாதிப்புக்கு அளிக்க வேண்டிய மருந்துகளை, மத்திய அரசின், 'ஆயுஷ்' துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ், ஒரு சாதாரண வைரஸ். எந்த மருத்துவமனையிலும், இதற்கு சிகிச்சை பெறலாம். அலோபதி மற்றும் ஆயுஷ் பரிந்துரைத்த மருந்துகளும் உள்ளன.ஒவ்வொரு மாவட்டத்திலும், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மருத்துவமனைகள் உள்ளன. இதை எல்லாம் பரிசீலிக்காமல், சாதாரண வைரஸ் கிருமியை, பெரிதாக சித்தரித்து விட்டனர். மக்கள் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி விட்டனர். ஊரடங்கால், நடுத்தர, அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.எனவே, ஊரடங்கு உத்தரவை விலக்க வேண்டும்.

அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறையை பின்பற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவை அமைத்து, சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.ஆலோசனைஅரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ''மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவின்படி, தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில், சில பணிகளுக்கு விலக்கும் அளிக்கப்பட்டது.

''நிபுணர்களின் ஆலோசனை பெற்றே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதைப்பற்றி, மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது,'' என்றார்.இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X