மாநகராட்சி பள்ளிகளில் ஆன்லைன் கல்வி துவக்கம் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக| Dinamalar

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளிகளில் ஆன்லைன் கல்வி துவக்கம் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக

Added : மே 23, 2020
Share
மதுரை,கொரோனா ஊரடங்கு எதிரொலியாக மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்தும் பணி துவங்கியது.ஊரடங்கால் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு விடுமுறையை பயனுள்ளதாக்க பாடம் நடத்தி வருகின்றன.மாநகராட்சி பள்ளிகளிலும் ஆன்லைன் வழியில் பாடம் நடத்தும் திட்டத்தை கமிஷனர் விசாகன்
 மாநகராட்சி பள்ளிகளில் ஆன்லைன் கல்வி துவக்கம் கொரோனா ஊரடங்கு எதிரொலியாக

மதுரை,கொரோனா ஊரடங்கு எதிரொலியாக மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்களை நடத்தும் பணி துவங்கியது.
ஊரடங்கால் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு விடுமுறையை பயனுள்ளதாக்க பாடம் நடத்தி வருகின்றன.மாநகராட்சி பள்ளிகளிலும் ஆன்லைன் வழியில் பாடம் நடத்தும் திட்டத்தை கமிஷனர் விசாகன் அறிமுகம் செய்துள்ளார். முதற்கட்டமாக 9ம் வகுப்பு முடித்து10ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இம்முறையில் பாடம் நடத்தும் பணி துவங்கியது.இதில் 1,500 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தினமும் காலை, மாலை தலா இரு பகுதிகளாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதிக மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி அவ்வை பள்ளி சிறப்பு வகுப்பில் இடம் பிடித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் நீட் பயிற்சி வழங்கவும் கமிஷனர் அறிவுறுத்தினார்.
10ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் பணியை கமிஷனர் ஆய்வு செய்தார். துணை கமிஷனர் நாகஜோதி, கணினி திட்ட தொகுப்பாளர் ரவி, தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X