தமிழ்நாடு

சிவகங்கையில் 12 பேர் டிஸ்சார்ஜ்  :தொற்றுடன் 4 பேர் மட்டுமே சிகிச்சை

Added : மே 23, 2020
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'கொரோனா' தொற்றுடன் சிகிச்சை பெற்ற 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மே 11 க்கு பின் மும்பையில் இருந்து வந்த 17 பேருக்கு தொற்று உறுதியாகி சிவகங்கையில் சிகிச்சை பெற்றனர். நேற்று ஒரே நாளில் 12 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். டிஸ்சார்ஜ் ஆன 12 பேர்:சிவகங்கை அருகே கூத்தாண்டம் 65 வயது ஆண், மதகுபட்டி அருகே அம்மன்பட்டி 54 வயது ஆண், கல்லல்

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் 'கொரோனா' தொற்றுடன் சிகிச்சை பெற்ற 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மே 11 க்கு பின் மும்பையில் இருந்து வந்த 17 பேருக்கு தொற்று உறுதியாகி சிவகங்கையில் சிகிச்சை பெற்றனர். நேற்று ஒரே நாளில் 12 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.

டிஸ்சார்ஜ் ஆன 12 பேர்:சிவகங்கை அருகே கூத்தாண்டம் 65 வயது ஆண், மதகுபட்டி அருகே அம்மன்பட்டி 54 வயது ஆண், கல்லல் வெற்றியூர் 57 வயது ஆண், சொக்கநாதபுரம் 47 வயது ஆண், தேவகோட்டை திருப்பாலைகோட்டை 53 வயது ஆண், சருகணி 58 வயது ஆண், கல்லல் அருகே சோமநாதபுரம் 57 வயது ஆண், கத்தப்பட்டு 54 வயது ஆண், சிங்கம்புணரி ஏ.காளாப்பூர் 43 மற்றும் 41 வயது ஆண், இவரது 35 வயது மனைவி, 9 வயது மகன் ஆகிய 12 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சிகிச்சையில் 4 பேர் மட்டும்: இது வரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் தொற்றுடன் வந்த 29 பேரில், 25 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். எஞ்சிய காரைக்குடி 29 வயது பெண், மானாமதுரை புளியங்குளம் 38 வயது ஆண், இளையான்குடி நெஞ்சாத்துார் 45 வயது ஆண், மறவமங்கலம் 33 வயது ஆண் 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X