பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்

Added : மே 23, 2020
Share
Advertisement

மதுரை, மதுரையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட எளியோருக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.* மண்டல ஓய்வு பெற்ற கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் வாசுதேவன், போத்திரெட்டி, பரமசிவன் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கலெக்டர் வினய்யிடம் ரூ.2.50 லட்சம் வழங்கினர்.* வாய்ஸ் டிரஸ்ட் சார்பில் நிர்வாக இயக்குனர் முருகேசன், ரூ.45 ஆயிரம் நிதியை கலெக்டரிடம் வழங்கினார்.* மகபூப்பாளையத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், மாவட்ட சர்வோதய சங்க செயலாளர் கண்ணன், அலுவலர் ரவி வழங்கினர்.* ஆரப்பாளையம் ரமேஷ் நாராயணன் வைகை காலனியில் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு 15 நாட்களாக அரிசி, பலசரக்கு பொருட்களை வழங்கி வருகிறார்.பெருங்குடி* அவனியாபுரம் அ.தி.மு.க., பகுதி செயலாளர் முனியாண்டி பூத்தோட்ட காலனியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு அரிசி, காய்கறிகள் வழங்கினார். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், புகழ், ஆறுமுகம், குமரேசன், தரணி பங்கேற்றனர்.திருப்பரங்குன்றம்* ஹார்விபட்டி நேசம் மக்கள் சேவை மையம் சார்பில் திருப்பரங்குன்றம், சந்திராபாளையம், தேவிநகரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.* தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை தெற்கு மாவட்டசெயலாளர் மணிமாறன் வழங்கினார்.கள்ளிக்குடி* இத்தாலுகாவிற்குட்பட்ட சென்னம்பட்டி பகுதியில் அமைச்சர் உதயகுமார் சொந்த செலவில் இலவச அரிசி விநியோகத்தை துவக்கி வைத்தார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஒன்றிய தலைவர் மீனாட்சி பங்கேற்றனர். திருமங்கலம் சாத்தங்குடியில் ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளர்களுக்கு இலவச அரிசி மற்றும் காய்கறி தொகுப்பு, கபசுர குடிநீர் பொடி தொகுப்பை அமைச்சர் வழங்கினார்.அலங்காநல்லுார்* குறவன்குளத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கோமாதா பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. நகர்ப்புற வாழ்வாதார இயக்க கூடுதல் இயக்குனர் பிரபாகரன் வழங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜா, வரி தண்டலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.சோழவந்தான்* திருவேடகம் விவேகானந்த கல்லுாரி சார்பில் கிராமங்களில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. செயலாளர்வேதானந்த, நிர்வாகி குலபதி அத்யாத்மனந்தா தலைமை வகித்தனர். முதல்வர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., யூத் ரெட் கிராஸ் அலுவலர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன், காமாட்சி, சதீஷ், பாபு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.* சத்திரம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் கருப்புசாமி வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனசேகர், ஆசிரியைகள் ராஜத்திரேவதி, தனலட்சுமி, மகேஸ்வரி, காமாட்சி, தேவிகா, உதவியாளர் பைரோஸ் பங்கேற்றனர்.உசிலம்பட்டி* இங்குள்ள ஒலிபெருக்கி அமைப்பாளர்களுக்கு தி.மு.க., சார்பில் நிர்வாகி இளமகிழன் மற்றும் பலர் அரிசி, காய்கறிகளை வழங்கினர்.பேரையூர்* இங்குள்ள நெசவாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், சின்னகருப்பையா, பிச்சைகனி, முருகன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X