புதுடில்லி : நிலக்கரி ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர், மது கோடாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்தது.
ஜார்க்கண்ட்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது.இம்மாநில முதல்வராக, 2006 முதல், 2008 வரை, மது கோடா பதவி வகித்தார். நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மது கோடாவுக்கு, 2017 ல், மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.இந்நிலையில், 2019 ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறு, டில்லி உயர் நீதிமன்றத்தில், மது கோடா மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், மது கோடா மனு மீதான தீர்ப்பை, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபு பக்ரூ, நேற்று அறிவித்தார்.அதில், 'கிரிமினல் குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கின்றனர். எனவே, ஊழல் வழக்கில், மது கோடாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க முடியாது' என, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE