தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் துாதரகம் வழக்கு

Added : மே 23, 2020
Share
Advertisement
புதுடில்லி : தமிழக சிறைத்துறைக்கு எதிராக, ஈரான் துாதரகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேற்காசிய நாடான ஈரான் துணை துாதரகம் சார்பில், தமிழக சிறைத்துறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விபரம்:ஈரானை சேர்ந்த மொசாவி மசூத் மற்றும் முகமது ஜாப்ரானி ஆகியோர், போதை பொருள் தொடர்பான வழக்கில்

புதுடில்லி : தமிழக சிறைத்துறைக்கு எதிராக, ஈரான் துாதரகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேற்காசிய நாடான ஈரான் துணை துாதரகம் சார்பில், தமிழக சிறைத்துறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விபரம்:ஈரானை சேர்ந்த மொசாவி மசூத் மற்றும் முகமது ஜாப்ரானி ஆகியோர், போதை பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களிடம், சிறை கண்காணிப்பாளர் சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதால், அவர்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். சிறை கண்காணிப்பாளரை, 'சஸ்பெண்ட்' செய்வதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும்.

கைதிகளுக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X