தமிழ்நாடு

கொரோனாவுக்காக ஸ்மார்ட் ஆக மாறிய மதுரை மருத்துவமனை

Added : மே 23, 2020
Share
Advertisement

மதுரை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரை ஸ்ரீராம் இ.என்.டி., மருத்துவமனையை பாதுகாப்பு அம்சங்களுடன் 'ஸ்மார்ட்' ஆக மாற்றியுள்ளார் டாக்டர் சரவணமுத்து.அவர் கூறியதாவது: கொரோனாவை எதிர்கொள்ள எச்சரிக்கையான சூழலில் வாழ்கிறோம். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பணியாளர்களை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். மருத்துவமனைக்குள் வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும். கல் உப்பு, மஞ்சள் மற்றும் சாதாரண நீரில் கை, கால்களை கழுவ வேண்டும். நோயாளிகள் உடல் வெப்பநிலை பரிசோதித்து சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர வைக்கப்படுகின்றனர். 'ஏ.சி.,'யை அகற்றி இயற்கை காற்று அறைகளில் வர வழி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பின் ஒருவராக பரிசோதனை அறைக்கு அழைக்கப்படுவர். நோயாளிக்கும், டாக்டருக்கும் இடையே கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள் இருந்து கையுறை அணிந்த கைகளை வெளியே நீட்டி நோயாளிகளை பரிசோதிக்கிறேன்.பார்வை நேரம் முடிந்ததும் கல்உப்பு, கிருமி நாசினி மூலம் மருத்துவமனை முழுவதும் சுத்தம் செய்யப்படுகிறது. சைனஸ் பிரச்னை இருந்தால் தொற்று ஏற்படும் என்பதால் துவக்கத்தில் சிகிச்சை பெற வலியுறுத்துகிறேன். முடிந்தவரை அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. சுவாச பாதை ஆரோக்கியமாக இருந்தால் கொரோனா தாக்காது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X