மதுரை, ஊரடங்குக்கு பின் பள்ளி மாணவர் நலன் காக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆசிரியர்களிடம் செயலி வழியாக ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன.மாணவர் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறது. யுனிசெப் மற்றும் தமிழ்நாடு குழந்தை நேய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர்கள் ஆலோசனை அளிக்க 'எப்.சி.எப்.எஸ்.,' என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.மண்டல பொறுப்பாளர் தலைமையாசிரியர் சரவணன் கூறியதாவது: இக்கூட்டமைப்பினருக்கு யுனிசெப் சார்பில் குழந்தை பாதுகாப்பு, உரிமைகள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஆலோசனை கேட்க துவங்கியுள்ளோம். இதில் 48 வினாக்கள் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர்கள் பதிலளித்தும், பொதுவான கருத்துக்களையும் பதிவிடலாம். அவை அரசு மற்றும் 'யுனிசெப்'பிடம் சமர்ப்பிக்கப்படும். பங்கேற்கும் ஆசிரியருக்கு சான்றிதழ் வழங்கப்படும், என்றார். விவரங்களுக்கு 93441 24572 ல் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE