(வழக்கமான லோகோ வைக்கவும்)9894009463 போன் கொண்ட பாக்ஸ் வைக்கவும்...............* தெரு விளக்குகள் இல்லைஅரும்பனுார் மலையாண்டிபுரம் தெருக்களில் மின் விளக்குகள் போதிய அளவு இல்லை. ரோடும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குடிநீர் வசதியுமின்றி மக்கள் தவிக்கின்றனர்.- மணி, அரும்பனுார்.///* குண்டும் குழியுமான ரோடுகள்மதுரையில் முக்கிய ரோடுகள், தெருக்கள் குண்டும், குழியுமாக உள்ளன. போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லாத இந்த சூழலில் அதிகாரிகள் ரோட்டை சீரமைக்கலாம். தெரு குழாய்கள், தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றையும் பழுது நீக்கி பராமரிக்கலாம்.- கருப்பையா, மேட்டுத்தெரு.///* கழிவுநீருடன் குடிநீர்மதுரை செங்கோல்நகரில் இரு மாதங்களாக குடிநீர் வரவில்லை. சில நாட்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு மாநகராட்சி அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைப்பார்களா.- ஆறுமுகம், செங்கோல்நகர். ///* அதிக அழுத்த மின்சாரம்மதுரை எஸ்.எஸ்.காலனி ஜவஹர் மெயின் ரோட்டில் அதிக அழுத்த மின்சாரம் அடிக்கடி சப்ளை செய்யப்படுகிறது. காற்று வீசும் போது பல மடங்கு அதிகமாக மின்சாரம் வருவதால் மின்சாதனங்கள் பழுதாக வாய்ப்புள்ளது. மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை.- நடராஜன், எஸ்.எஸ்.காலனி.///* பஸ் வசதி இல்லைமதுரை சூர்யாநகரில் இருந்து மாட்டுத்தாவணிக்கு பஸ் வசதி இல்லை. வெளியூர் செல்லும் மக்கள் சிரமப்படுகிறார்கள். சூர்யா நகர் - மாட்டுத்தாவணி, அழகர்கோயில் வழித்தடத்தில் பஸ்கள் இயக்கினால் இப்பகுதியினர் பயன்பெறுவர்.- ஜோதிமகாலிங்கம், சூர்யாநகர்./* ரேஷன் பொருள் கடத்தல்மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெருவிலுள்ள ரேஷன்கடையில் உணவுப்பொருட்களை ஊழியர்கள் அடிக்கடி கடத்தி விற்கின்றனர். நுகர்வோருக்கு எடை குறைவாக உணவுப்பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது.- மணிகண்டன், தெற்கு மாசி வீதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE