கிணற்றில் 9 சடலங்கள் தெலுங்கானாவில், 'பகீர்!'

Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாரங்கல் : தெலுங்கானாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஆறு பேர் உட்பட, ஒன்பது பேரின் சடலங்கள் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரங்கல் பகுதியில் வசித்து வந்த, கூலித் தொழிலாளி, அவரது மனைவி, மகள், பேரன் உள்ளிட்ட, நான்கு பேரின் சடலங்களும் பொதுக் கிணறு ஒன்றில், நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், கூலித் தொழிலாளியின், இரண்டு மகன்கள் உள்ளிட்ட மேலும், ஐந்து பேரின் உடல்கள் நேற்று அதே கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. சடலங்களை மீட்ட போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளோம். உயிரிழந்த, ஒன்பது பேரின் சடலங்களிலும், காயங்கள் இல்லை என்பதால், இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்துதான், உண்மை தெரியவரும். இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
23-மே-202011:35:12 IST Report Abuse
skv srinivasankrishnaveni தாளித என்றால் அவங்கள்லாம் மனுஷா தானே? ஏண்டா இப்படி கெளமா சாதியைக்கட்டிண்டு அலுத்து ஒப்பாரி வைக்குறீங்க போன உசிரு திரும்பியா வரப்போவுது கிணத்துல செத்துருக்காங்களே அப்போ கிணற்றின் நீர் கெட்டுப்போயிருக்காதா எல்லாத்தை ஒட்டவெளிச்சு எடுத்தாலும் கூட சுத்தம் ஆவுமா ஊரிண்ணே இருக்கும் நீர் என்ன செய்வானுங்க. நீங்க சொல்றவங்கள்லாம் தாழ்ந்த சாதின்னா அவங்களை அதுகளா பாக்கும் உயர் சாதிக்காரனெல்லாம் ரொம்பவே புனிதமானவங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X