தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share

மதுரை ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சுப்பையன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஜெய்கணேஷ் கோரிக்கைகளை விளக்கினார். நிர்வாகிகள் மலைராஜன், சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ரத்து உள்ளிட்ட அரசு உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும். மருத்துவ, அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது போராட்ட காலங்களில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X