மதுரை கொரோனா நிவாரணமாக, பிராமணர் சங்கம் சார்பில் நலிவுற்ற பிராமணர்கள், சமையல் கலைஞர்களுக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.1.90 லட்சத்தை மாநில துணை பொது செயலாளர் இல.அமுதன் வழங்கினார். மாவட்ட தலைவர் பக்தவத்சலம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெய்ஹிந்த்புரம் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைவர் வெங்கடேஷ், நகர் கிளை தலைவர் கணபதி வரத சுப்பிரமணியன், பொது செயலாளர் பாபு, பொருளாளர் சங்கரநாராயணன் பங்கேற்றனர். ஜெய்ஹிந்த்புரத்தில் நலிவுற்றவர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE