சமூக வானொலிகளில் விளம்பர நேரம் அதிகரிப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சமூக வானொலிகளில் விளம்பர நேரம் அதிகரிப்பு'

Added : மே 23, 2020
Share
புதுடில்லி : சமூக வானொலிகளில், விளம்பரத்துக்கான நேரத்தை, ஒரு மணி நேரத்துக்கு, ஏழு நிமிடத்திலிருந்து, 12 நிமிடங்களாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள, 290 சமூக வானொலி நிலையங்கள் வழியாக, நாட்டு மக்களிடம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், நேற்று பேசினார், அவர் பேசியதாவது:சமூக வானொலி நிலையம் அமைப்பதில் ஏற்படும் செலவில், 75 சதவீதத்தை,

புதுடில்லி : சமூக வானொலிகளில், விளம்பரத்துக்கான நேரத்தை, ஒரு மணி நேரத்துக்கு, ஏழு நிமிடத்திலிருந்து, 12 நிமிடங்களாக உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டில் உள்ள, 290 சமூக வானொலி நிலையங்கள் வழியாக, நாட்டு மக்களிடம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், நேற்று பேசினார், அவர் பேசியதாவது:சமூக வானொலி நிலையம் அமைப்பதில் ஏற்படும் செலவில், 75 சதவீதத்தை, மத்திய ஒலிபரப்புத் தறை அமைச்சகம் ஏற்றுக் கொள்கிறது. தினமும் ஏற்படும் செலவுகளை, அந்த நிலையம் ஏற்றுக் கொள்கிறது. இப்போது, சமூக வானொலிகளில், ஒரு மணி நேரத்துக்கு, ஏழு நிமிடம், விளம்பரத்துக்காக ஒதுக்கப்படுகிறது. 'டிவி' சேனல்களில், 12 நிமிடம் ஒதுக்கப்படுகிறது. வானொலி நிலையங்களுக்கும், டிவி சேனல்களுக்கு வழங்குவதுபோல், 12 நிமிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் மூலம், வானொலி நிலையங்களுக்கு வருவாய் அதிகரிக்கும். உள்ளூர் விளம்பரங்கள் அதிகளவில், சமூக வானொலி நிலையங்களில் ஒலிபரப்ப வாய்ப்பு ஏற்படும். சமூக வானொலி நிலையங்கள், மாற்றத்துக்கான ஏஜன்ட்களாக உள்ளன. தினமும், பல லட்சம் மக்கள், சமூக வானொலிகளில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகயை கேட்கின்றனர். சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எப்.எம்., வானொலி நிலையங்களில், செய்திகள் ஒலிபரப்பப்படுவது போல், சமூக வானொலி நிலையங்களிலும், செய்தி கள் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற நோய்களை விரட்டியது போல், கொரோனா வைரசையும், நாம் நிச்சயம் விரட்டியடிப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X