பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் கிருமிகள் அழிக்கும் கருவி அறிமுகம்

Added : மே 23, 2020
Share
Advertisement
 வாகனங்களில் கிருமிகள் அழிக்கும் கருவி அறிமுகம்

கோவை:எல்ஜி எக்யூப்மென்ட்ஸின் துணை நிறுவனமான, ஏடிஎஸ் எல்ஜி, வாகனங்களில் நோய் தொற்று கிருமிகளை அழிக்க, 'ஓசோன் ஏர் ஸ்டெர்லைசர்' என்ற புதிய கிருமி நாசினியை தயாரித்துள்ளது.ஏடிஎஸ் எல்ஜி நிர்வாக இயக்குனர் பிரவீன் திவாரி கூறியதாவது:பாதுகாப்பான, துாய்மையான வாகன சூழலை, உருவாக்கும் முயற்சியில், ஈடுபட்டு வருகிறோம். இம்முயற்சியில், உருவாக்கப்பட்டதுதான், புதுமையான, ஓசோன் ஏர் ஸ்டெர்லைசர். இதை எளிதாக பயன்படுத்தலாம்; கையடக்கமாக எடுத்துச் செல்லலாம். சிறிய ரக, சொகுசு கார்கள், வணிக கனரக, இலகுரக வாகனங்களின் டிரைவர் கேபின் போன்றவற்றை, 10 நிமிடங்களில், இதன் மூலம் துாய்மைப்படுத்தலாம். இந்த கிருமி நாசினி உற்பத்தியை, ஆக்ஸிஜனில் இருந்து, 12 வோல்ட் டிசி வாகனத்தில் உள்ள, மின்சாரத்தை கொண்டு தயாரிக்க முடியும். இதில், ரசாயன, வேதிப்பொருள் கலவை இல்லை.இவ்வாறு, அவர் கூறினார். விவரங்களுக்கு, டோல்ப்ரீ எண்: 1800 425 3544.இணையதளம்: enquiry@ats-elgi.com.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X