கோவை:கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள, 'அம்மா' உணவகங்களுக்கு சாப்பிட வருவோருக்கு, 'தெர்மல்' மீட்டர் மூலமாக, உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.கோவை மாநகராட்சி பராமரிப்பில், அரசு மருத்துவமனை வளாகம், புலியகுளம், பூ மார்க்கெட் உள்ளிட்ட, 10 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் செயல்படுகின்றன. ஒரு உணவகத்தில், நாளொன்றுக்கு, சராசரியாக, 1,500 பேர் உணவு உட்கொள்கின்றனர். 10 உணவகங்களுக்கு, 15 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.'அம்மா' உணவக ஊழியர்களுக்கு, 'கொரோனா' பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உணவு சாப்பிட வருவோருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருக்கிறதா என சோதிப்பதில்லை.அவர்களில் யாருக்கேனும் பாதிப்பு இருந்தால், உணவகத்தில் பணிபுரி வோருக்கும் எளிதில் பரவ வாய்ப்பிருக்கிறது. அதனால், உணவகத்துக்கு சாப்பிட வருவோருக்கு, 'தெர்மல்' மீட்டர் மூலமாக உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.ஊழியர்கள் கூறுகையில், 'தெர்மல் மீட்டர் வாங்கிக் கொடுத்தால், சாப்பிட வருபவர்களுக்கு நாங்களே பரிசோதித்து விடுவோம்,' என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE