மேட்டுப்பாளையம்:வன விலங்குகளின், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனப்பகுதியில் கட்டியுள்ள தொட்டிகளில், வனத்துறையினர் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.மேட்டுப்பாளையத்தில், மழை பெய்யாததால், கடும் வறட்சி நிலவுகிறது. வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்து வருகின்றன.நீரோடைகள், குட்டைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர், பல இடங்களில் தொட்டிகள் அமைத்து, தண்ணீரை நிரப்பி வருகின்றனர். இதனால் வன விலங்குகளின் குடிநீர் தேவை, முழு அளவில் பூர்த்தி செய்யப்படுகிறது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், 18 இடங்களில் தொட்டிகள் கட்டி, குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ''வனவிலங்குகளின் எச்சம் தொட்டிகளில் விழுவதால், தண்ணீர் நாற்றம் அடிக்கும். அதனால், 10 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் அனைத்து தொட்டிகளையும் சுத்தம் செய்து, காயவைத்து, அதன் பிறகு தண்ணீர் நிரப்பப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE