பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணியாளர்களை ஏற்றி வர பத்து பஸ்கள்

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:அரசு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் போக்குவரத்து வசதிக்கென, 10 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஊரடங்கு காரணமாக ரயில், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வெளி மாநிலத்தவருக்கு சிறப்பு ரயில்களும், அரசுத் துறை ஊழியர்களுக்கு, அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.கடந்த, 18ம் தேதி முதல் அரசுப் பணியாளர்களுக்கு, இயக்கப்பட்ட ஆறு பஸ்களின் எண்ணிக்கை தற்போது, 10 ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, மேட்டுப்பாளையத்துக்கு இரு பஸ்கள், பொள்ளாச்சிக்கு மூன்று மற்றும் சூலுார், அன்னுார், தீத்திபாளையம், வடவள்ளி, கருமத்தம்பட்டி ஆகிய ஊர்களுக்கு தலா ஒரு பஸ் என, 10 பஸ்கள் இயக்கப்படுவதாக, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X