பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

நரசிம்மநாயக்கன்பாளையம்: இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் டேங்க் வீதி எம்.ஜி.ஆர்., நகர், புதுப்பாளையம், கங்கா நகர், பூச்சியூர் ஆகிய இடங்களில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ரகுநாதன் தலைமையில், தீயணைப்பு ஊழியர்கள் கிருமிநாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.கபசுர குடிநீர் வினியோகம்கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையம் எட்டாவது வார்டில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மஞ்சிஸ்வரி காலனியில் வசிக்கும் பொதுமக்கள், 150 பேருக்கு தி.மு.க., சார்பில், கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தி.மு.க., எட்டாவது வட்ட துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார், காமராஜ் மற்றும் மாநகர, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாணவர்களின் குடும்பத்தினருக்கு உதவிசின்ன தடாகம்: தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும், 70 மாணவ, மாணவியரின் குடும்பத்தினருக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாரதி மற்றும் ஆசிரியர்கள் சார்பில், தலா, 500 ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்களை வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.தி.மு.க., சார்பில் உணவுபன்னீர்மடை: துடியலுார் அருகே பன்னீர்மடை கிராமத்தில் தி.மு.க., மற்றும் காங்., கட்சி சார்பில், ஊரடங்கு உத்தரவால், பாதிக்கப்பட்ட, 700 பேர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க., பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு, காங்., முன்னாள் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய துணை செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகை, பணம் திருட்டுநரசிம்மநாயக்கன்பாளையம்: இங்குள்ள எல்.ஆர்.ஜி. நகரில் வசிக்கும் வரதராஜன், தன் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்க்கும்போது, வீட்டில் இருந்த இரண்டு சவரன் நகை, 5,000 ரூபாய் ரொக்கம் காணாமல் போயிருந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.வீரபாண்டி பிரிவில் கேமரா திருட்டுபெ.நா.பாளையம்: வீரபாண்டி பிரிவில் ஸ்டுடியோ வைத்திருப்பவர் சம்பத்குமார். இவர் ஸ்டுடியோவை பூட்டி விட்டு, மீண்டும் காலையில் வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. ஸ்டுடியோவுக்குள் வைக்கப்பட்டிருந்த, 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமரா, 2000 ரூபாய் திருட்டு போயிருந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.ஊரடங்கு நிவாரணம்பெ.நா.பாளையம்: இங்குள்ள சாமி செட்டிபாளையத்தில் ஊரடங்கு உத்தரவால், பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. சாமி செட்டிபாளையத்தில் உள்ள சால்சர் நிறுவனம் சார்பில், பொது மக்கள், 200 பேருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களை நிர்வாக இயக்குனர் துரைசாமி, இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் குமார் ஆகியோர் வழங்கினர்.செயல் அலுவலர் இடமாற்றம்அன்னுார் : அன்னுார் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலராக, இடமாற்றம் செய்யப்பட்டார். கூடுதல் பொறுப்பாக, அன்னூர் பேரூராட்சியையும் கவனிப்பார் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.சத்ய சாய் அறக்கட்டளை அசத்தல்அன்னுார் : சத்ய சாய் அறக்கட்டளை சார்பில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, ஒரு டன் கோதுமை மாவு அன்னூர் தாசில்தார் சந்திராவிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, வட மாநிலங்களைச் சேர்ந்த, 75 பேருக்கு, தலா 5 கிலோ கோதுமை மாவு வழங்கப்பட்டது.குளம் சீரமைப்பு பணி துவக்கம்அன்னுார்: குப்பனுாரில் உள்ள ஒன்றரை ஏக்கர் குட்டை துார்வாருதல் மற்றும் குட்டைக்கு மழை நீர் வரும் பாதையை சீரமைக்கும் பணியை, கூடு தன்னார்வ நிறுவனம் சார்பில், ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.ஊராட்சித் தலைவர் ரஞ்சிதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சங்கரா கல்லுாரி சார்பில் உதவிஅன்னுார்: குன்னத்துார் ஊராட்சியில், கொரோனா ஊரடங்கால், பாதிக்கப்பட்ட, 100 குடும்பங்களுக்கு, கோவை, சங்கரா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், அரிசி, கோதுமை, மைதா அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X