பொது செய்தி

தமிழ்நாடு

தம்பதியர் வந்தால் எப்படி : ஆட்டோ ஓட்டுனர்கள் கேள்வி

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:ஆட்டோவில் ஒருவரை மட்டும், ஏற்றி சென்றால் கட்டுப்படி ஆகாது. குறைந்தபட்சம் இரண்டு பேர்களையாவது ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என, ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில், இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஒரு பயணியை மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும், மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும், மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை, கிருமி நாசினி தெளித்து ஆட்டோவை சுத்தம் செய்ய வேண்டும்...' என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, கோவை அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் கூறுகையில், 'ஒருவர் மட்டும் வாடகைக்கு வந்தால் பிரச்னை இல்லை. கணவன், மனைவி இருவர் வந்தால் என்ன செய்வது. குழந்தைகளுடன் வந்தால் எப்படி தவிர்க்க முடியும்.ஒரு நபருக்காக காத்திருந்தால், யாருக்கும் வாடகை கிடைக்காது. பஸ் போக்குவரத்து இல்லாத போது, இது எப்படி சாத்தியம் ஆகும். குறைந்தது இரண்டு பேரையாவது, ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும்' என்றனர்.கோவை மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழில் சங்க செயலாளர் அன்சர் பாட்ஷா கூறும் போது, ''கோவை மாநகரத்தில் மட்டும், 15 ஆயிரம் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர்.இந்த ஊரடங்கால் அத்தனை பேர் குடும்பங்களும் வறுமையில் உள்ளன. இரண்டு மாதங்களாக வீட்டில் முடங்கி இருக்கிறோம். இந்நிலையில், ஒரு நபரைதான் ஏற்றி செல்ல வேண்டும் என்றால், எங்களுக்கு கட்டுப்படியாகாது. இரண்டு பேரையாவது ஏற்றி செல்ல அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X