கோவில் கேட்டில் பக்தர்கள் வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கேட்டில் பக்தர்கள் வழிபாடு

Added : மே 23, 2020
Share
 கோவில் கேட்டில் பக்தர்கள் வழிபாடு

மேட்டுப்பாளையம்:கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அமாவாசை அன்று பக்தர்கள் கோவில் நுழைவாயில் கேட்டின் முன், சூடம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு உத்தரவால், கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகள் மட்டும், சுவாமிக்கு மூன்று கால பூஜைகள் செய்து வருகின்றனர்.நேற்று அமாவாசை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் கேட் முன்பாக பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டுச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X