பொது செய்தி

இந்தியா

'கொரோனா ஒழிப்புக்குஒருங்கிணைந்த திட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

'எதிர்க்கட்சி தலைவர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சோனியா நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஸ்டாலின் கூறியதாவது:மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்கவோ, பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாநில அரசுகளுக்குத் தர வேண்டிய, ஜி.எஸ்.டி., வரி பங்கையும், மத்திய அரசு விடுவிக்கவில்லை.தி.மு.க.,வின், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ், 28 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளோம். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உத்திகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும், நேரடியாக பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த கொடூரத்தை வென்று விடலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X