பொது செய்தி

தமிழ்நாடு

செலவினங்களை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:தமிழக அரசின் உத்தரவுப்படி, செலவினங்களை தவிர்க்க, கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு, கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.'கொரோனா' நோய் பரவல், அரசின் கஜானாவை பெருமளவு பாதித்துள்ளதால், செலவினங்களை குறைக்க முடிவு செய்துள்ளது. இனி வரும் காலங்களில், என்னென்ன செலவினங்களை தவிர்க்க வேண்டுமென, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சியில் உள்ள பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, பொது சுகாதாரப்பிரிவு, கல்வி பிரிவு மற்றும் அனைத்து மண்டல உதவி கமிஷனர்களுக்கும், கமிஷனர் ஷ்ரவன்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், 'அலுவலகத்துக்கு பர்னிச்சர், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் புதிதாக வாங்குவதை தவிர்க்க வேண்டும். பயணப்படி மற்றும் பயணச்செலவு வழங்கப்படாது.அரசு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, கருத்தரங்குகள் நடத்தக்கூடாது. அரசு செலவில் பொக்கே, நினைவுப்பரிசு, சால்வை, பரிசு பொருட்கள் வாங்கக்கூடாது' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X