பொது செய்தி

தமிழ்நாடு

மோட்டார் அறையை மீட்டது மாநகராட்சி

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:சீட்டு விளையாடுவதற்கும், மதுபானம் அருந்துவதற்கும் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மோட்டார் அறையை சிலர் பயன்படுத்தி வந்தனர். அந்த அறையை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.கோவை மாநகராட்சி, 37வது வார்டு, ஜீவா வீதியில், பெரிய மாரியம்மன் கோவிலுக்கு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பொது கிணறு, மின் மோட்டார் அறை, உள்ளன.இப்பகுதியை சேர்ந்த சிலர், மோட்டார் அறை பூட்டை உடைத்து, கடந்த இரு மாதங்களாக, மது அருந்துதல், சீட்டு விளையாடுதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக, கிழக்கு மண்டல அதிகாரிகள் சென்று, சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சமூக விரோத செயல்கள் நடப்பதை உறுதி செய்தனர். மோட்டார் அறைக்கு புதிதாக பூட்டு போட்டு, மாநகராட்சி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X