சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ., மகளுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

Added : மே 23, 2020
Share
Advertisement
போத்தனுார்:முன்னாள் எம்.எல்.ஏ., வின் மகளிடம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.சுந்தராபுரம் அருகேயுள்ள மாச்சம்பாளையத்தில் வசிப்பவர் ரோகிணி; முன்னாள் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த ஒரு வாலிபர், ரோகிணியின் மகளை அழைத்து, 'ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும்; இல்லையெனில் ஆசிட் ஊற்றி கொன்று விடுவேன்', என மிரட்டியுள்ளார்.ரோகிணி

போத்தனுார்:முன்னாள் எம்.எல்.ஏ., வின் மகளிடம் பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.சுந்தராபுரம் அருகேயுள்ள மாச்சம்பாளையத்தில் வசிப்பவர் ரோகிணி; முன்னாள் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு வந்த ஒரு வாலிபர், ரோகிணியின் மகளை அழைத்து, 'ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும்; இல்லையெனில் ஆசிட் ஊற்றி கொன்று விடுவேன்', என மிரட்டியுள்ளார்.ரோகிணி அளித்த புகாரின்படி, போலீசார் விசாரித்தனர். அவ்வாலிபர் குனியமுத்தூர், இடையர்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார், 25 என்பது தெரிந்தது.பணம் கேட்டு மிரட்டல், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X