சொட்டுநீர் பாசனம் அமைக்க 3.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசனம் அமைக்க 3.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு

Added : மே 23, 2020
Share

சூலூர்:சொட்டுநீர் பாசனம் அமைக்க, சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறைக்கு, ரூ. 3.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.நடப்பாண்டில், சொட்டுநீர் பாசனம் அமைக்க, சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறைக்கு, 560 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 3.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் நந்தினி கூறுகையில், ''சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே சொட்டுநீர் அமைத்து, ஏழு ஆண்டுகள் முடிந்திருந்தால், உபகரணங்களை புதிதாக மாற்றிக்கொள்ளலாம்,'' என்றார். சிட்டா, அடங்கல், ஆதார், ரேஷன் நகல்கள், போட்டோ, உள்ளிட்டவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் வருமாறு: உதவி இயக்குனர் நந்தினி: 9751699850, துணை அலுவலர் சேகர்-: 9944264889, உதவி அலுவலர் கங்கைமணி-: 8778664997, தியாகு:- 9786555569, சேட்டு-: 8015163864.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X