பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டு மனு

Added : மே 23, 2020
Share
Advertisement

கோவை:தனியார் பள்ளி, கல்லுாரிகள் கல்வி கட்டணங்களை செலுத்த, கட்டாயப்படுத்தக்கூடாது என, பா.ஜ., சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார், கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக, பொதுமக்கள் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சில தனியார் பள்ளி, கல்லுாரிகளில், நடப்பு ஆண்டுக்கான கல்விக்கட்டணத்தை உடனடியாக செலுத்த வலியுறுத்தப்படுகிறது. இது, மனிதாபிமானமற்ற செயல். கல்வி நிறுவனங்கள் திறந்து, மூன்று மாத அவகாசம் அளித்து, பணம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கடனுதவி பெற்ற சுயஉதவி குழுவினர் மற்றும் தொழில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த, உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X