பொது செய்தி

தமிழ்நாடு

ரிலாக்ஸ் மனமே ரிலாக்ஸ்...

Added : மே 23, 2020
Share
Advertisement
'சும்மா டேஸ்ட் பாருப்பா... தண்ணீ அடிக்கறது.. பெரிய கொலைக்குற்றம் இல்லே... ஜஸ்ட் ஒரு ரிலாக்ஸ்தான்... எத்தனையோ பேரு தண்ணீ அடிச்சு, வாழ்க்கையிலே பெரிய நிலைக்கு வந்து இருங்காங்க.. ஒரு 'சிப்' மட்டும் அடி.. சும்மா கும்முன்னு இருக்கும்' என, முருகனுக்கு நண்பர்கள் ஆசை காட்டினர்.மதுவின் மணம் முருகனுக்கு குமட்டியது. இருந்தாலும், நண்பர்களின் கட்டாயத்தால், டம்ளரில் இருந்த மதுவை, ஒரே
 ரிலாக்ஸ் மனமே ரிலாக்ஸ்...

'சும்மா டேஸ்ட் பாருப்பா... தண்ணீ அடிக்கறது.. பெரிய கொலைக்குற்றம் இல்லே... ஜஸ்ட் ஒரு ரிலாக்ஸ்தான்... எத்தனையோ பேரு தண்ணீ அடிச்சு, வாழ்க்கையிலே பெரிய நிலைக்கு வந்து இருங்காங்க.. ஒரு 'சிப்' மட்டும் அடி.. சும்மா கும்முன்னு இருக்கும்' என, முருகனுக்கு நண்பர்கள் ஆசை காட்டினர்.மதுவின் மணம் முருகனுக்கு குமட்டியது. இருந்தாலும், நண்பர்களின் கட்டாயத்தால், டம்ளரில் இருந்த மதுவை, ஒரே மூச்சில் குடித்து முடித்தான். சிறிது நேரத்தில் அவனது உடலில் ஏற்பட்ட கிறக்கம், அவனுக்கு வாழ்க்கையில் இருந்த எல்லா கவலைகளையும், போக்கி விட்டதாக உணர்ந்தான்.ஆனால், அந்த பழக்கம் தன்னையும், தன் குடும்பத்தையும் படுகுழியில் தள்ளப்போகிறது என்பதை, அப்போது முருகன் உணரவில்லை. முருகனுக்கு ஒர்க் ஷாப்பில் வேலை. வேலைக்கு போனால்தான் கையில் நாலு காசு கிடைக்கும். இவரது வருமானத்தை நம்பிதான் குடும்பமே. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஓடி விட்டன. ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள்.தனது ஐம்பதாவது வயதில்தான், முருகனுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. முதலில் வாரம் ஒரு முறை ஞாயிறு மட்டும் என ஏற்பட்ட குடிப்பழக்கம், காலப்போக்கில் தினந்தோறும் என வரம்பு மீறியது. வேலைக்கு கூட போகாமல், குடியே கதி என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் அவர் வசித்த பகுதியில், அவருக்கு இருந்த மரியாதை காற்றோடு போனது. வேலைக்கு செல்லும் நாட்கள் குறைந்ததால், வருமானமும் குறைந்தது. குடிக்க பணம் கேட்டு மனைவியை அடித்து, உதைக்கும் நிலை உருவானது. தட்டிக்கேட்கும் மகனுக்கும், உதை விழுந்தது. மிதமிஞ்சிய குடியால், மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு, மனைவி மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார் முருகன்.மன உளைச்சலுக்கு ஆளான மனைவி, கணவனின் நிலை குறித்து தோழியிடம் சொல்லி அழுதார். பீளமேட்டில் உள்ள வழிகாட்டி மனநல மருத்துவமனைக்கு, இருவரையும் அழைத்துச் சென்றார் தோழி. உரிய சிகிச்சைக்குப் பின் முருகன், இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.வழிகாட்டி மருத்துவமனையின், மனநல மருத்துவர் டாக்டர் ஷியாமினி கூறியதாவது:குடிகாரர்களுக்கு, முதலில் மதுபழக்கத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்க வேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகள் மது அருந்திய பழக்கத்தால் நடுக்கம், நரம்புகள் பாதிப்பு, கை, கால் வலுவற்ற நிலையில் இருக்கும்.இவர்களுக்கு தனிப்பட்ட கவனத்துடன் கூடிய, Individual மற்றும் Group counselling வழங்க வேண்டும். குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியும் என்ற நம்பிக்கையை, அவர் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.கை, கால்களை பழையபடி இயங்க வைக்க, தன்னுடைய அன்றாட பணிகளை பிறர் உதவி இல்லாமல் மேற்கொள்ள, Ooccupational therapy மற்றும் Social work input சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.சிகிச்சைக்கு பிறகு இரண்டு ஆண்டுகள், தொடர்ந்து மது அருந்தாமல் இருந்தால், மது அருந்தும் பழக்கத்தில் இருந்து, முழுமையாக மீண்டு வருவார் என நம்பலாம்.சிகிச்சைக்கு பிறகு, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டவர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆதரவு மையம் ஆகியவை, வழிகாட்டி மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றன.நிகோட்டின், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருந்தால், எப்பேர்பட்ட குடிகாரர்களையும் மீட்டு விடலாம்.இவ்வாறு, டாக்டர் ஷியாமினி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X